அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் ஆஜராகவில்லை!Sponsoredடி.டி.வி.தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கை, சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

1996-ம் ஆண்டு, இங்கிலாந்தில் இருந்து தொலைக்காட்சி தொடர்பான சாதனங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக, டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர். இது தொடர்பாக, டி.டி.வி.தினகரன் மீது ஏழு வழக்குகள் தொடரப்பட்டன.

இதில், இரண்டு வழக்குகளில் இருந்து டி.டி.வி.தினகரனை நீதிமன்றம் விடுவித்தது. மேலும், ஐந்து வழக்குகள் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உள்ளன. இது தொடர்பான வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால், டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored