'பெயின்ட்டை உங்களது முகத்தில் பூசிக்கொள்ளுங்கள்' - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!'மைல்கல்லில் பூச எடுக்கும் பெயின்ட்டை, உங்களது முகத்தில் பூசிக்கொள்ளுங்கள்' என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காட்டமாகக் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்லில், ஊர்ப் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். தற்போது மத்திய அரசு, ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியில் எழுதி வருகிறது.

Sponsored


இதற்கு, தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தி.மு.க மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'மைல்கல்லில் உள்ள இந்தி மொழியை அழிப்பதற்கு எடுக்கும் பெயின்ட்டை, உங்களது மூஞ்சில் பூசிக்கொள்ளுங்கள்' என்று காட்டமாகக் கூறினார்.

மேலும், மைல்கல்லில் உள்ள ஊர்ப் பெயர்களை இந்தியில் எழுத வேண்டும் என யார் கோரியது என்று கேள்வி எழுப்பினார். தேர்தலில் பணம் கொடுப்பது குறித்த கேள்விக்கு, 'தேர்தலில் பணம் கொடுக்கும் வேட்பாளரையும், கட்சியையும் தேர்தலில் நிற்க விடாமல் தடை செய்ய வேண்டும். பணம் கொடுப்பதற்காகத் தேர்தலைத் தள்ளிப்போடுவது சரியான தீர்வல்ல' என்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored