ஒரு பன்ச் இல்ல... ஒரு பரபரப்பு இல்ல! - விஜயகாந்தை நாம எவ்ளோ மிஸ் பண்றோம் தெரியுமா!?ஒரு பக்கம் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்' என அலறுகிறார் ஸ்டாலின். மறுபக்கம் 'இரட்டை இலை பயன்படுத்துகிறார்கள்' என மாறி மாறி பன்னீர் அணியும் சசி அணியும் புகார் வாசிக்கின்றனர். நடுவே மேக்கப் கலையாமல் பிரசாரம் செய்துவிட்டு செல்கிறார் தீபா. இதெல்லாம் போதாதென 'கடலினிக்கரை போனோரே... போய் வரும்போல் என்ன கொண்டு வரும்?' என ஜலகிரீடை நடத்திக்கொண்டிருக்கிறார் கங்கை அமரன். இத்தனை பரபரப்பிற்கும் நடுவே சாமானியத் தமிழன், ஒருவரை அநியாயத்திற்கு மிஸ் செய்கிறான். அவர்... கேப்டன் விஜயகாந்த்! உடல்நலம் தேறி திரும்பி வந்தவர் இன்னும் பழைய ஃபார்மில் அரசியல் களத்தில் நுழையவில்லை. கேப்டனை எதற்காகவெல்லாம் நாம் மிஸ் செய்கிறோம்?

Sponsored


ஈர்ப்பு மையம் :

Sponsored


கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே தமிழக அரசியல் களத்தின் மையப்புள்ளியாக இருந்தார் விஜயகாந்த். 'இவர் எங்ககூட வருவாரு.. இல்லல்ல எங்ககூடத்தான்' என ஆளாளுக்கு கேப்டனை கோயில் பிரசாதம் போல பங்கு போடத் துடித்துக்கொண்டிருப்பார்கள். கடந்த சட்டசபை தேர்தல் வரையிலும் அதுதான் நிலைமை. ஆனால் இப்போதோ அவர் கருத்தைக் கேட்கக்கூட யாருமில்லை. முன்னணி நிர்வாகிகளும் உடன் இல்லாமல், பரபர அரசியல் நிகழ்வுகளுக்கும் விதை போடாமல் விஜய'காந்தம்' வலு இழந்து நிற்கிறது.

Sponsored


எக்கச்சக்க எனர்ஜி :

தமிழகத் தலைவர்களிலேயே பயங்கர எனர்ஜி கேப்டனுக்குத்தான். அவர் வாய் திறந்தால் வைரல், கை அசைத்தால் வீடியோ மீம் என நெட்டிசன்கள் ஓவர்டைம் பார்ப்பார்கள். மறுநாள் மொத்த ஊரும் அவரைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கும். சுருங்கச் சொன்னால் கேப்டன் ஒரு ட்ரெண்ட் செட்டர். ஆனால் இப்போது அவர் ஆப்சென்ட் ஆனதால் காமெடியன்கள் இல்லாத சுந்தர்.சி படம் போல காய்ந்து கிடக்கிறது சோஷியல் மீடியா.  

ஆக்‌ஷன் சீக்வென்ஸ் :

திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் விஜயகாந்த் முஷ்டி முறுக்கிக்கொண்டேதான் இருப்பார். சட்டசபையில் 'ஏய்ய்ய்ய்ய்' என நாக்கு துருத்தியது, சொந்தக் கட்சி வேட்பாளரையே போட்டுப் பொளந்தது என பிரேக்கிங் நியூஸ்களை சின்னம்மாவிற்கு முன்பே வாரி வாரி வழங்கியவர் கேப்டன். ஆனால் இப்போது அவரில்லாத அரசியல் கூட்டங்கள் பீஸ் இல்லாமல் குஸ்கா போல சப்பென இருக்கிறது.

பன்ச் பாண்டி :

'தூக்கி அடிச்சுடுவேன் பாத்துக்க'வாக இருக்கட்டும், 'இருங்க கைல என்னமோ மாட்டுது'வாக இருக்கட்டும் சினிமாவை விட கேப்டனின் ரியல் லைஃப் பன்ச்சுகளுக்குத்தான் அபார வரவேற்பு. மதுரை ஸ்லாங்கில் அவர் திட்டுவதைக் கேட்கவே காது கோடி வேண்டும். டி.வி-யில், ஃபேஸ்புக்கில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகும் அந்த வீடியோக்களை விட பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர் இருக்கவே முடியாது. மிஸ்ஸிங் தட் பன்ச்சுகள்!

எகிடுதகிடு இன்டர்வியூக்கள் :

நாஞ்சில் சம்பத் போல முக்கால்மணி நேர லைவ் டெலிகாஸ்டோ, தமிழிசை போல ஒருமணி நேர 'சொன்னதையே சொல்லுவேன்' பிரஸ்மீட்டோ கேப்டனுக்கு தேவையே இல்லை. வெறும் ஐந்து நிமிட இன்டர்வியூக்களை போகிறபோக்கில் தட்டிவிட்டு விமானம் ஏறுவார். அவர் ஊர் சுற்றி டயர்டாகி ரெஸ்ட் எடுத்து திரும்ப வந்து சேரும்வரை அவை வைரலாகவே இருக்கும். தட் இஸ் கேப்டன் பவர்!

இப்போ தெரியுதா மக்கழே... கேப்டனை எவ்வளவு மிஸ் பண்றோம்னு!

- நித்திஷ்Trending Articles

Sponsored