இந்தியாவுக்கு வீட்டோ அதிகாரத்துடன் இடம் - சுஷ்மா ஸ்வராஜ்!



Sponsored



ஐ.நா.-வில், நிச்சயம் இந்தியா வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினராகும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் மேலவையில், ஏப்ரல் 6-ம் தேதி  நடந்த கேள்வி நேரத்தின்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், ''ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. நிரந்தர உறுப்பினராக இருக்கும் சீனா, இன்னும் வெளிப்படையாக எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த முறை இல்லை என்றால், அடுத்த முறை நிச்சயம் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆகும்.  அந்த நம்பிக்கை இருக்கிறது. அதற்குத் தேவையான முயற்சிகளை எடுத்துவருகிறோம்.

 


பழைய மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு இடையே வேறுபாடு காட்டுவதை இந்தியா விரும்பவில்லை. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்ற பாகுபாடு இருக்கக்கூடாது. தற்போது, நிரந்தர உறுப்பினர்களுக்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களும், பொறுப்புகளும் இந்தியாவுக்கும் வழங்க வேண்டும். அதாவது, பாதுகாப்பு சபையில் இப்போது இருக்கும் ஐந்து நாடுகளும், எப்படி வீட்டோ அதிகாரத்துடன் இருக்கிறதோ, அதே அதிகாரம் இந்தியாவுக்கும் தர வேண்டும். பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினராகச் சேர்க்கப்படவேண்டியது இந்தியாவின் உரிமை'' என்று கூறினார்.

Sponsored


- எஸ்.முத்துகிருஷ்ணன்
 

Sponsored




Trending Articles

Sponsored