சரத்குமார் பிரதமர் ஆகாததுக்கு இதுதான் காரணமா..?!



Sponsored



சரத்குமாருக்கு மட்டும் ஏன்தான் இப்படி 'ஜாக்பாட்' குஷ்பு ஜாக்கெட் மாதிரி டிசைன் டிசைனா நடக்குனு தெரியலை. ஆளாளுக்கு இப்போ அவரைப் பற்றிதான் பேசிட்டு இருக்கிறாங்க. அதுலே இருந்து ரெண்டு கரண்டியைத்தான் இங்கே அள்ளி ஊத்தியிருக்கிறோம்.

* பிரதமர் ஆகிறதுதான் எங்களோட ஒரே நோக்கம்னு சொன்ன சரத்குமார், சினிமா தேர்தல்கள்ல இருந்து சில்லறைத் தேர்தல் வரைக்கும் ஒண்ணுவிடாம துண்டு போட்டு முதல் ஆளா நின்னுக்கிட்டு இருக்கிறாரே... அதெல்லாம் ஏன்னுதான் தெரியவே இல்லை. கண்ணாடியைத் திருப்பினாக்கூட ஆட்டோ ஓடும். ஆனா சினிமா தேர்தல்ல நின்னா பிரதமரா எப்படி ஆக முடியும்கிறதுதான் இப்ப யூரோ ரிங்கிட்ஸ் டாலர் கேள்வி.

Sponsored


* காசு பணத்தைக் கொட்டி கருத்துக்கணிப்பு வெச்சாலும் அவ்வளவு துல்லியமா கண்டுபிடிக்க முடியாது. ஆனா சரத்குமார் ஒரு கட்சிக்கு சப்போர்ட் பண்ணுறார்னா ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்கிறது ஊருக்குள்ள பல பேர் சொல்ற கருத்துக்கணிப்பு. ஒண்ணு சரத்குமார் சப்போர்ட் பண்ணின கட்சி தோற்கும். இல்லைனா கூட்டணியில் நிற்கிற இவர் தோற்பார். ஆண்டாண்டு காலமா இப்படித்தான் நடந்துட்டு இருக்குங்கிறதும் அதே கருத்துக்கணிப்புக் குழு சொல்ற கருத்துக்கணிப்புதான். ஆங்ங்ங்..

Sponsored


* எவ்வளவோ பேரைக் குழப்பியிருக்கிறார் சரத்குமார். இப்போ அங்கே சுற்றி இங்கே சுற்றி ஆர்.கே நகர் தேர்தல்லேயும் குழப்போ குழப்புனு குழப்பியிருக்காரு மக்களே. எல்லாக் கட்சிக்கும் எதிராகத்தான் ச.ம.க சார்புல ஒரு வேட்பாளரை நிறுத்தினார் சரத்குமார். ஆனா வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால கடைசியில அவர் போட்டியிடலை. அது இருக்கட்டும். அப்படின்னா தினகரனையும் எதிர்த்துதானே தேர்தல்ல நின்னாரு. இப்போ மனு தள்ளுபடி ஆன ஒரே காரணத்துக்காக திடீர்னு தினகரனை சப்போர்ட் பண்றார். ஆனாலும் அதுக்காக இவரது கொள்கைதான் என்ன கோட்பாடுதான் என்னனு யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. அதெல்லாம் இருந்தாத்தானே கேட்கிறதுக்குனு நான் சொல்லலை; மக்களேதான் சொல்றாங்க. 

* இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ச.ம.க சம்மர் ஆஸ்ட்ராலஜி பேரவை என்ன சொல்லுதுனா அ. இ. ச. ம. க-னு பேர் இருந்தவரைக்கும் பிரதமர் ஆகிறதுக்கான வாய்ப்பு பிரமாதமா இருந்துச்சு. எப்போ அதில் இருந்து 'அகில இந்திய'ங்கிறதைத் தூக்கினாங்களோ அப்பவே அது அடிபட்டுப் போச்சுங்கிறதுதான். இல்லைனா இந்நேரம் மான் கி பாத்ல மோடியா பேசிட்டு இருப்பாரு; வரலட்சுமி டாடிதான் பேசிக்கிட்டு இருந்திருப்பார்.

* அட...  சரத்குமார் நிலைமைதான் இப்படி இருக்குதுனா தினகரனோட கதை அதைவிடக் கொடுமை. நிற்கிற எல்லா தேர்தல்லேயும் தோத்துக்கிட்டு வர்ற சரத்குமார் இப்போ திடீர்னு நம்ம அணிக்கு சப்போர்ட் பண்றாரே... சேர்க்கலாமா இல்லை வேணாமா, இதுக்கு சிரிக்கிறதா இல்லை அழறதா, நிஜமாவே டெலிகேட்டேட் பொசிசன்ல இருக்கிறாரு தினகரன். பின்னே நடிகர் சங்கத் தேர்தல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா.. இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் போச்சேன்னு தினகரன் ஆதரவாளர்களே பேசிக்கிறதெல்லாம் அவர் காதில் கேட்குமா இல்லையா?.

ஆனா, பாருங்க இப்ப இடைத்தேர்தலே ரத்து ஆகிப்போச்சு. பவர் ஆஃப் நாட்டாமைடா

- ஜெ.வி.பிரவீன்குமார்



Trending Articles

Sponsored