'பன்னீர்செல்வத்தின் உத்திகளை பார்த்து எதிர் அணிகளுக்கு பயம்' - ஜி.கே.வாசன் அதிரடி



ஓ.பன்னீர்செல்வத்தின் தேர்தல் பிரசார உத்தியைப் பார்த்து எதிர் அணிகள் பயப்படுகின்றன என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர் கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

Sponsored


அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், 'ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளது. தேர்தல் ஆணையம் ஆர்.கே நகரில் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். மக்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப வாக்களிக்க உகந்த சூழலை தேர்தல் ஆணையம் தான் உருவாக்கித்தர வேண்டும். தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் செயல்பட வேண்டும். விதிகளை மீறும் கட்சிகள் மீது உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Sponsored



இன்று நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். இதன் அடிப்படையில் உண்மை நிலை பொதுமக்களுக்கு தெரியவரும். ஓ.பன்னீர்செல்வத்தின் தேர்தல் பிரசார உத்திளை கண்டு மற்ற  கட்சிகளுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே அந்த உத்தியைக் குறை கூறுகின்றனர். பன்னீர்செல்வத்துடனான கூட்டணி அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடரும் வாய்ப்பு இருக்கிறது. டெல்லியில் நடக்கும் தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம். விவசாயிகள் பிரச்னையில் உடனடியாக மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவை ஏற்படுத்தி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்' என்றும் தெரிவித்தார்.

Sponsored


செய்தி : எம்.புண்ணியமூர்த்தி
 



Trending Articles

Sponsored