ஆர்.கே.நகரில் அடிப்படை வசதிகள் இல்லை - ஸ்டாலின்!ஆர்.கே.நகரில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து  பொன்னுசாமி தெரு, இருசப்ப தெரு, வெங்கடேச தெரு, பாரதியார் தெரு, எம்.பி.டி குடியிருப்பு பகுதிகளில்  மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது,  ஸ்டாலின் பேசுகையில், ''இன்றைக்கு வார்டு வாரியாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துகொண்டிருக்கும், மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வராக இருந்தபோது செய்தது என்ன?  ஏதாவது ஒரு திட்டத்தினை அறிவித்து அதனை நிறைவேற்றியதுண்டா?

 

Sponsored


உலகச் சுகாதார தினமான இன்று தமிழ்நாட்டின் மானத்தைக் கப்பலேற்றும் விதமாக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பினாமி ஆட்சியில் ஊழல் செய்து வருமான வரித்துறையினரிடம் மாட்டிக்கொண்டு அவர்களின் பிரச்னைகளையே தீர்க்க முடியாமல் இருக்கிறார்கள். ஐந்தாண்டு காலமாக எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் இருக்கும் இந்த ஆர்.கே.நகர் தொகுதி மக்களாகிய உங்களின் பிரச்னையை எப்படித் தீர்ப்பார்கள்? 
ஓரணியில் இருக்கும்போது ஊழல் செய்து இன்றைக்கு தனித்தனி அணிகளாக பிரிந்து, உத்தமர் வேடம் பூண்டிருக்கும் பினாமிகளின் முகத்திரைகளை ஆர்.கே.நகர் மக்கள் கிழித்தெறிய வேண்டும். ஒரே அணியில் இருந்து கொள்ளையடித்து நாட்டையே குட்டிச்சுவராக்கிய ஊழல் அணிகளை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள்'' என்று பேசி, வாக்கு சேகரித்தார்.
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored