ரெய்டு விவகாரம்: கைது ஆவாரா விஜயபாஸ்கர்? #VijayBaskarSponsoredசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்குள் 7-ம் தேதி  அதிகாலை 4 மணிக்கு வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, வீட்டு வசதித்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர், காவலை மீறி உள்ளே புகுந்து, வாக்குவாதம் செய்தனர். அவர்களுடன் சேர்ந்து, விஜயபாஸ்கரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சில ஆவணங்களையும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் பறித்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனர் கரண் சின்ஹாவிடம், வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள், கூடுதல் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்தனர். தங்களது பணிக்கு இடையூறு செய்ததால், விஜயபாஸ்கர் மீது போலீஸ் கமிஷனரிடம் வருமான வரித்துறையினர் புகார் அளித்துள்ளனர். இதனால், விஜயபாஸ்கர் கைதாக வாய்ப்பு உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored