இது மத்திய அரசின் உள்நோக்க சதி- விஜயபாஸ்கர் பாய்ச்சல்!Sponsored ''ஆர்.கே நகர் தேர்தலை கருத்தில்கொண்டு மத்திய அரசு உள்நோக்கத்துடன் செய்திருக்கும் சதியே இந்த வருமான வரி சோதனை. என் வீட்டில் இருந்து பணமோ, ஆவணங்களோ கைப்பற்றப்படவில்லை'' என்று பாய்ந்திருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

 தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 7-ம் தேதியாகிய நேற்று காலையில் தொடங்கிய இந்தச் சோதனை மற்றும் விசாரணை இன்று அதிகாலை 4.30 வரை நீண்டது. அவரது வீட்டில் இருந்து வருமான வரித்துறையினர் சென்றதும், நிருபர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர், ''இங்கிருந்து பணமோ, எந்தவித ஆவணமோ கைப்பற்றப்படவில்லை. ஆர்கே நகர் இடைத்தேர்தலை கருத்தில்கொண்டு மத்திய அரசு உள்நோக்கத்துடன் செய்த சதி இது. சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடாது'' என்று பாய்ந்தார்.
''இவ்வளவு நேரம் வருமான வரி அதிகாரிகள் என்ன செய்தார்கள்?"' என்ற கேள்விக்கு, ''ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தோம்'' என்று சிரிப்புடன் பதில் அளித்தார் விஜயபாஸ்கர்.

Sponsored


 படம்: ஆ.முத்துக்குமார்

Sponsored
Trending Articles

Sponsored