மத்திய அரசு நெருக்கடியை முறியடிப்போம் - அன்புமணி உறுதிSponsoredபா.ம.க இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் 'விதிப்படிதான் செயல்படுகிறோம்; மக்கள் உணர்வுகளை மதித்து நடப்போம்' என்று மத்திய அரசும், 'மக்கள் விருப்பப்படி இத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்' என மாநில அரசும் கூறி வந்தாலும், இரு அரசுகளின் நோக்கமும் மக்களை எப்படியாவது ஏமாற்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுதான். மாநில அரசுக்கு அக்கறை இருந்தால், இத்திட்ட சுரங்க குத்தகை உரிமம் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கு (ஓ.என்.ஜி.சி.) வழங்கப்பட்டிருந்தால், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், அதை வழங்க முடியாது என்று அறிவிக்க வேண்டும்.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவடைந்த பின்னர், அடுத்த வாரத்திலேயே தமிழக சட்டமன்றத்தைக் கூட்டி இத்திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அதை முறியடித்து, தமிழக மக்களுக்கு துணையாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் செயல்பட வேண்டும். இதைச் செய்யத் தவறினால், நெடுவாசல் திட்டத்துக்கு எதிராக மக்களையும், இளைஞர்களையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். விளைநிலங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை என்ன விலை கொடுத்தாவது பா.ம.க தடுத்து நிறுத்தும். இது உறுதி'' என்று எச்சரித்துள்ளார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored