ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதிய கருத்துSponsoredஆர்.கே.நகர் இடைத்தேர்தலை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யக் கூடாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் வெள்ளியன்று அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பான ஆவணங்களும் சிக்கியது. ஏற்கெனவே, தொகுதியில் பணம் கொடுத்ததாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்திருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், 'தேர்தலை எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யக் கூடாது. பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். ஆர்.கே.நகரில் நடைபெற்ற பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்' என்றும் தெரிவித்தார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored