ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து எதிர் எதிர் கருத்துகளைக் கிளப்பும் பொன்.ராதாவும், தமிழிசையும்ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யக் கூடாது என்று பொன்.ராதாகிருஷ்ணனும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழிசை சௌந்தர்ராஜனும் எதிர்எதிர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Sponsored


வருமான வரித்துறை சோதனை குறித்து தெரிவித்த தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், 'வருமான வரித்துறையினரால் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏழு அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். அவர்கள் மீது சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

Sponsored


இதுகுறித்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், 'வருமான வரித்துறையினர் சோதனை பா.ஜ.க அரசின் சதி வேலை. இரண்டு அணியாக போட்டியிடும் அ.தி.மு.கவினரில் ஒரு தரப்பினரை பலப்படுத்தவும், மற்றொரு தரப்பினரை பலவீனப்படுத்தவும் நடத்தப்பட்ட சோதனை. ஆர்.கே.நகர் தேர்தலை தள்ளி வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. அடுத்த முறை இருமடங்கு பணப் பட்டுவாடா இருக்கும்' என்றார். இதுகுறித்து தெரிவித்த திருமாவளவன், 'தேர்தல் தள்ளி வைப்பது தேவையற்றது' என்று தெரிவித்துள்ளார். வருமான வரித்துறை சோதனை குறித்து தெரிவித்த இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு , 'தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது, மத்திய அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க தவறி விட்டது' என்றார்.

Sponsored


ஆர்.கே.இடைத்தேர்தல் குறித்துபேசிய பொன்.ராதாகிருஷ்ணன், 'இடைத்தேர்தலை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யக்கூடாது' என்றார். ஆனால் தமிழிசை சௌந்தர்ராஜன், 'நேர்மையாக தேர்தலை நடத்த முடியவில்லை என்றால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்' என்றார். Trending Articles

Sponsored