புதுச்சேரி தலைமைச் செயலாளர் மீது கிரண்பேடி புதிய குற்றச்சாட்டு!Sponsoredபுதுச்சேரி தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா உள்பட, சில அரசுத்துறை செயலாளர்கள், தனக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடியை பா.ஜ.க அரசு நியமித்தது. அவர் நியமிக்கப்பட்டதில் இருந்தே முதல்வர் நாராயணசாமிக்கும் கிரண்பேடிக்கும் இடையே மோதல் நீடித்துவருகிறது.

தன்னுடைய நடவடிக்கைகளில், கிரண்பேடி தலையிடுவதாக முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார். மேலும், அரசு அதிகாரிகளின் மீது யார் அதிகாரம் செலுத்துவது என்பதிலும் மோதல் நீடித்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், நகராட்சி ஆணையர் ஒருவரை இடமாற்றம் செய்த விவகாரத்தில் தலையிட்ட கிரண்பேடி, தனக்குதான் அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்தார். இந்த நிலையில், தற்போது தனக்கு ஒத்துழைப்பு அளிக்காத அரசு அதிகாரிகளின்  பெயர்களை வெளியிட்டுள்ளார். அதில், 'புதுச்சேரி தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா, நிதித்துறைச் செயலாளர் கந்தவேலு ஆகியோர் பெயர்களை, ஒத்துழைப்பு அளிக்கவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் 'ஒத்துழைப்பு அளிக்காததால், புதுச்சேரியின் வளர்ச்சி பாதிக்கிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored