சிறையில் இருந்தபடியே, வைகோ உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!Sponsoredசீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்து, சிறையில் இருந்தபடியே ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்செய்துள்ளார்.

2009-ம் ஆண்டில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதால், அப்போது அவர் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது. அதுதொடர்பான வழக்கு, கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கினார். இருப்பினும் ஜாமீனை மறுத்த அவர், சிறைக்குச் செல்வதாகத் தெரிவித்தார்.

 நீதிபதி அவரை, 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  சிறைக்குச் செல்வதற்கு முன்பு, தொடர்ச்சியாக சீமைக்கருவேல மரத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். சிறையில் இருக்கும் வைகோ, சில தினங்களுக்கு முன்னர் 'தைலமரம்' என்று அழைக்கப்படும் 'யூகலிப்டஸ்' மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார்.

Sponsored


இந்த நிலையில், சிறையில் இருந்தபடியே கருவேல மரம் அகற்றுவது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்செய்தார். அந்த மனுவில், 'ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றவும் அதற்கு உரிய வகையில் சிறப்புச் சட்டம் இயற்றவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored