'அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்கவேண்டும்'டிடிவி தினகரனை நெருக்கும் சீனியர்கள்!Sponsored              

.டி.ரெய்டுக்கு ஆளாகி,விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை, அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும் என்று அ.தி.மு.க. மூத்த அமைச்சர்கள் தினகரனுக்கு வலுவான கோரிக்கை வைத்திருப்பது, அ.தி.மு.க.வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை உண்டாக்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவிலும்,தமிழக அரசு நிர்வாகத்திலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரு அணியாகவும்,ஜெ.அண்ணன் மகள் தீபா தலைமையில் ஒரு அணியாகவும் அ.தி.மு.க. பிளவுப்பட்டு உள்ளது.அதே போல அரசு நிர்வாகம் புதிய திட்டங்கள்,ஒப்பந்தங்கள்,தீவிர செயலாக்கம் என்று எதுவும் இன்றி ஸ்தம்பித்து இருக்கிறது.ஒவ்வொரு அமைச்சரும் தனக்கென ஒரு லாபியை வைத்துக்கொண்டு,அரசு நிர்வாகத்தை இயங்கி வருகிறார்கள்.இதில் தென்மாவட்ட லாபி,கொங்கு மாவட்ட லாபி என்றும் அமைச்சர்கள் 'பலம்' காட்டிக்கொள்கிறார்கள்.

Sponsored


இந்த நிலையில்,ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.அதற்கு அ.தி.மு.க பிரிவினைகளும், அமைச்சர்கள் தரப்பினர் விநியோகித்த கோடிக்கணக்கான ரூபாய்களுமே காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.தமிழகத்தில் இதுவரையில் நடந்த தேர்தல்களில் இது போன்ற முறைகேடுகள்,வன்முறைகள் நடந்தது இல்லை என்றும்,அந்த அளவுக்கு அ.தி.மு.கவினர் நடவடிக்கைகள் இருந்தன என்று அணியாகப் பிரியாத அ.தி.மு.க.பற்றாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதே போல சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பிலிருந்து ஐ.டி.அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்,முக்கிய ஆவணங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored


அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முற்றுகிறது நெருக்கடி!

தற்போதைய அ.தி.மு.க. நிலவரம் குறித்து நம்மிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்,"பணம் பறிமுதல்,விசாரணை என்று அடுத்தடுத்த சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை , தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீதான களங்கம் நீங்கும் என்றும் சீனியர் அமைச்சர்கள் கருதுகிறார்கள்.இதற்காக அவர்கள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தியும் உள்ளனர்.

வியாழக்கிழமையன்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை சென்னையில் உள்ள அவரின் இல்லத்தில்,அ.தி.மு.க. சீனியர் அமைச்சர்கள் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது அமைச்சர் தங்கமணி,'ஏன் இவ்வளவு தாமதம்,விஜயபாஸ்கர் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்க தாமதிப்பது ஏன்' என்று அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்த தம்பிதுரை, 'பெங்களூரு செல்லவேண்டும், அங்கிருந்து என்ன முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறதோ அதைஒட்டியே நாமும் செயல்படமுடியும்' என்று பதில் கூறியுள்ளார்.

                  

அதே போல அமைச்சர்கள்,ஜெயக்குமார்,திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்துள்ளார்கள்.அவரிடமும் விஜயபாஸ்கர் குறித்து வலுவாகப் புகார்கள் தெரிவித்து,தீவிரமாக ஆலோசித்துள்ளார்கள். ஆனால் தினகரன், விஜயபாஸ்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இது கட்சிக்குள்ளேயே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கொங்கு மாவட்டத்தில் மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் அந்த முடிவுக்கு விஜயபாஸ்கர் செய்த உள்ளடி வேலைகள்தான் காரணம் என்று தெரிகிறது" என்று தெரிவித்தார்.

இதனிடையே, தமிழ்ப்புத்தாண்டையொட்டி அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம்,சென்னையில் உள்ள தினகரன் இல்லத்தில் நடந்தது. அதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்துக் காரசாரமாக விதிக்கப்பட்டுள்ளன. விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்றும் தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது மேலும் கட்சிக்குள் குழப்பங்களையே ஏற்படுத்தும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-சி.தேவராஜன் Trending Articles

Sponsored