தமிழக அமைச்சர்கள் மூவர் மீது வழக்குப் பதிவு! மாநில அரசுக்கு மேலும் சிக்கல்..!Sponsoredஅமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது, வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்யவிடமால் தடுத்ததாக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியான தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவகங்களில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள், அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பணி செய்யவிடாமல் தடுத்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டினர். மேலும், வருமான வரித்துறை பெண் அதிகாரியை மிரட்டியதாகவும், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Sponsored


இதுதொடர்பாக சில தினங்களுக்கு முன் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இதையடுத்து, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆதாரங்கள் அழிப்பு உள்ளிட்ட குற்றப் பிரிவுகளின் கீழ், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜூ ஆகியோர் மீதும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தின் மீதும் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored