அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்கள் - தலைவர்களின் பதில்கள்



விவசாயிகள் பிரச்னை தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

Sponsored


அனைத்துக் கட்சி கூட்டம் நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 'விவசாயிகள் நலன் காக்கவும், தமிழர்கள் நலன் காக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முழு அடைப்பின் தேவை குறித்து மக்களிடையே விளக்க ஏப்ரல் 22-ம் தேதி அனைத்துக் கட்சி விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும். அரசியலுக்காக இந்தக் கூட்டம் நடைபெறவில்லை. விவசாயிகளுக்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது' என்றார். அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைவர் முத்தரசன், 'விவசாயிகள் முழுமையாக வஞ்சிக்கப்படும் இத்தகையை சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவைப்படுகிறது' என்றார்.

Sponsored


Sponsored


அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, 'மத்திய அரசு விவசாயிகளை கடுமையாக வஞ்சிக்கிறது. அதனைக் கண்டித்து பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்' என்றார். அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 'நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் தேர்தல் கூட்டணிக்கானது அல்ல. பொது வேலைநிறுத்த அழைப்பை ஒரு அரசியல் கட்சியின் செயல்பாடாக கருத வேண்டும். தமிழக மக்களின் அழைப்பாக கருத வேண்டும். இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும், இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் பங்கேற்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.



Trending Articles

Sponsored