திடீர் அதிரடியில் இறங்கினார் மு.க.ஸ்டாலின்!Sponsored'சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்ட வேண்டும்' என சபாநாயகர் தனபாலிடம் தி.மு.க செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார். ஸ்டாலினின் இந்த அதிரடி நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படம்: க.பாலாஜி

Sponsored


தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழல் நிலவிவருகிறது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்; ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையில் கூட்டம்; ஒதுங்கிக்கொள்வதாக டி.டி.வி.தினகரனின் அறிவிப்பு என பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது தமிழக அரசியல். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று காலை தி.மு.க செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பின்னர், முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

Sponsored


இந்த நிலையில், சபாநாயகர் தனபாலை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார் மு.க.ஸ்டாலின். அவருடன் தி.மு.க-வின் எட்டு முன்னணி நிர்வாகிகளும் சென்றனர். அந்தச் சந்திப்பில், 'தற்போதைய அரசியல் சூழல், விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க, தமிழக சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்ட வேண்டும்' என அந்த மனுவில் கோரியுள்ளார். தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இதே தொனியில் கடிதம் எழுதியுள்ளார் மு.க.ஸ்டாலின்.Trending Articles

Sponsored