ட்விட்டரில் டி.டி.வி.தினகரன் உருக்கம்!Sponsored'தனக்கு ஒத்துழைப்பு தந்த நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி' என ட்விட்டரில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார் டி.டி.வி.தினகரன்.

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், தான் நேற்றே கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டேன் எனக் கூறி, இன்று காலை அதிரவைத்தார், டி.டி.வி தினகரன். மேலும், 'அ.தி.மு.க-வில் இருந்து என்னை ஒதுக்கியதால் நான் கவலைப்படவில்லை. என்னை ஒதுக்குவதால் அவர்களுக்கு நன்மை என்றால், அதுவே நடக்கட்டும். கட்சியோ ஆட்சியோ, பிளவுபட நான் காரணமாக இருக்க மாட்டேன். நேற்றே நான் ஒதுங்கிவிட்டேன்' எனத் தெரிவித்து, இன்று அவர் தலைமையில் நடக்க இருந்த எம்எல்ஏ-க்கள் கூட்டத்தையும் ரத்துசெய்வதாக அறிவித்தார். 

Sponsored


Sponsored


தற்போது, தனது விலகல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுவரும் தினகரன், 'இக்கட்டான சூழ்நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டேன். ஏதோ ஒரு அச்சம் காரணமாக அமைச்சர்கள் என்னையும், குடும்பத்தினரையும் ஒதுங்கி இருக்கச் சொல்கிறார்கள். பொது வாழ்க்கையில் அச்சம் இருக்கக்கூடாது. நான் ஒதுங்கி இருப்பதனால் கட்சிக்கு நன்மை என்றால், ஒதுங்கியிருப்பதில் தப்பில்லை என நினைக்கக்கூடிய முதிர்ச்சி உள்ளவன்.

கட்சியும் ஆட்சியும் பலவீனம் ஆவதற்கு நான் என்றும் காரணமாக இருக்க மாட்டேன். எனக்கென்று ஒரு பொறுப்பு உண்டு என்ற எண்ணத்தில் சொல்கிறேன், எந்தக் காரணத்தைக்கொண்டும் கட்சி பிளவுபட்டுவிடக்கூடாது; அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அத்துணை கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.Trending Articles

Sponsored