பாபர் மசூதி விவகாரம்: உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு!பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில், உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை, காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றுள்ளனர்.

Sponsored


1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல கலவரங்கள் நடைபெற்றன. இதில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் பலர் குற்றம் சாட்டப்பட்டனர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும், இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Sponsored


இதனிடையே, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நசீம் கான் கூறுகையில், இந்தத் தீர்ப்பை வரவேற்பதாகவும், இதன்மூலம் நீதித்துறை மீது மக்கள் கொண்ட நம்பிக்கை நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், 'நாட்டிலுள்ள அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டவர்களே' எனத் தெரிவித்துள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored