செந்தில் பாலாஜி குற்றச்சாட்டுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதிலடிSponsoredகரூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட இருந்த மருத்துவக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் முயற்சி செய்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதற்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கவும் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'மருத்துவக் கல்லூரி டீன் கூறிய கருத்தின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிக்கான இடம் மாற்றப்பட்டது. ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட இருந்த மருத்துவக் கல்லூரி வேறு இடத்துக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.

Sponsored


அப்போது செந்தில் பாலாஜி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மருத்துவக் கல்லூரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவதற்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளது. உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் இடத்தில் மருத்துவக் கல்லூரி கட்டப்படும். கரூரில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்றார். ஏற்கெனவே ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் என்று இரு அணிகள் சண்டையிட்டுக்கு கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கிடையே புதிய சண்டை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. 
 

Sponsored
Trending Articles

Sponsored