விவசாயிகளுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்Sponsoredவிவசாயிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு விட்டு வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக ஏப்ரல் 25-ம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தி.மு.க தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருமாவளவன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Sponsored


ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், 'பொது வேலை நிறுத்தத்தை நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டு அனைத்து அமைப்புகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரச்னை குறித்து பேசுவதற்கு பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் நேரம் ஒதுக்கப்படவில்லை. விவசாயிகள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை கைவிட்டு விட்டு வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored