டி.டி.வி.தினகரன் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தம்பிதுரை பரபரப்பு கருத்துSponsored'தேர்தல் ஆணையம் பணம் வாங்கும் ஒரு அமைப்பு அல்ல. அதனால் டி.டி.வி.தினகரன் பணம் வழங்க முயற்சி செய்ததாக வரும் செய்தியை நான் தவறானதாகவே பார்க்கிறேன்' என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். 


இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறையினரின் விசாரணையில் ஆஜராவதற்காக டிடி.வி.தினகரன் டெல்லி சென்றுள்ளார்.

Sponsored


இந்த நிலையில் இதுகுறித்து டெல்லி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, 'டெல்லியில் போராடும் விவசாயிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார். தேர்தல் ஆணையம் இந்திய ஜனநாயகத்தின் தூணாக உள்ளது. அதனை கொச்சைப்படுத்தும் வகையில் யாரும் செயல்படக் கூடாது. தேர்தல் ஆணையம் பணம் வாங்கும் ஒரு அமைப்பு அல்ல. அதனால் டி.டி.வி.தினகரன் பணம் வழங்க முயற்சி  செய்ததாக வரும் செய்தியை தவறானதாகவே பார்க்கிறேன்' என்றார். 

Sponsored
Trending Articles

Sponsored