தி.மு.க பினாமி அரசாக இருந்ததா? மு.க.ஸ்டாலினுக்கு வெங்கையா நாயுடு கேள்விSponsoredகாங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் போது தி.மு.கவை வைத்து பினாமி ஆட்சி நடத்தியது என்று கூறலாமா?, என மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 


தமிழக அரசியல் களத்தில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசை மத்திய பா.ஜ.க அரசு இயக்கி வருகிறது என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார். இந்த சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு, 'தமிழகத்தில் நிலையான அரசு வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம்.

Sponsored


தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு பா.ஜ.கவுக்கு எந்த தொடர்பு இல்லை. அ.தி.மு.கவின் உள்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க தலையிடாது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் போது தி.மு.கவை வைத்து பினாமி ஆட்சி நடத்தியது என்று கூறலாமா?. உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு தான் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது. தமிழகத்துக்கு விரைவில் நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படுவார். இந்தி திணிப்பு செய்யவில்லை. இந்தி படிப்பது பயனுள்ளது. இதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.' என்று தெரிவித்தார். 

Sponsored
Trending Articles

Sponsored