'இரட்டை இலை' லஞ்ச விவகாரம் : 2-வது நாள் விசாரணையில் டி.டி.வி.தினகரன் ஆஜர்Sponsoredஇரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதற்காக லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தது தொடர்பான வழக்கின் இரண்டாவது நாள் விசாரணையில் டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜரானார். டெல்லி குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ஏப்ரல் 16-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர். அவரிடமிருந்து ஒருகோடியே 30 லட்சம் ரூபாயும், இரண்டு சொகுசு கார்கள் மற்றும் சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சுகேஷிடம் நடைபெற்ற விசாரணையில், 'டி.டி.வி.தினகரன் தரப்பு தான் மீட்டுத் தர கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக' தெரிவித்துள்ளார். இதனையடுத்து டி.டி.வி.தினகரன் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

Sponsored


இந்த வழக்கு தொடர்பாக டி.டி.வி.தினகரனிடம் டெல்லி குற்றப்பிரவு காவல்துறையினர் நேற்று சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். நேற்று விசாரணை முழுவதுமாக முடிவடையாத நிலையில் இன்றும் விசாரணை தொடர்கிறது. இரண்டாம் நாள் விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் தற்போது நேரில் ஆஜராகியுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையில் டெல்லி காவல்துறையினர் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Sponsored
Trending Articles

Sponsored