விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்... - முதல்வர் எடப்பாடி பழனிசாமிSponsoredவிவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு கருணை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். 


அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.

Sponsored


இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், 'பழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையான 1,882 கோடி ரூபாயை வழங்க வேண்டும். நீட் உள்பட மத்திய அரசு சார்பில் நடைபெறும் அனைத்து நுழைவுத் தேர்வுகளில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். இலங்கை வசமுள்ள 133 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்க்காப்பிட்டுத் தொகையை இந்த மாத இறுதிக்குள் வழங்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored