கச்சேரிக்கா போனீங்க! முதல்வரை விளாசும் மு.க.ஸ்டாலின்Sponsored'டெல்லியில் நடைபெற்ற 'நிதி ஆயோக்' கூட்டத்தில், தமிழக நலன்கள் குறித்தும் உள்கட்டமைப்புகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசாமல் திரும்பியது கண்டனத்துக்கு உரியது' என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்றனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்கவில்லை. அந்தக் கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து விலக்கு, பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுதல் போன்ற விஷயங்கள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்திருந்தார்.

Sponsored


இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக நலன்கள் குறித்தும் உள்கட்டமைப்புகள் குறித்தும் எதுவும் பேசமால் திரும்பியது கண்டனத்துக்குரியது. கடன் சுமையில் உள்ள தமிழக நிலைமையை மாற்ற முயற்சிக்காமல், நிதி ஆயோக் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி வீணடித்துவிட்டார். நானும் கச்சேரிக்குப் போனேன் என்ற வகையில் சென்று திரும்பியுள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored