யார் கட்டுப்பாட்டில் கொடநாடு பங்களா? மு.க.ஸ்டாலின் கேள்விSponsoredமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களா தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. ஓம் பகதூர் என்பவர், அங்குள்ள பங்களாவில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்தார். ஓம் பகதூர், நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த பத்து ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வந்தார்.

நள்ளிரவில், காரில் வந்த மர்மக் கும்பல், இவரைக் கொலை செய்துவிட்டுத்  தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவத்தில் மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கொடநாடு பங்களாவில் கொள்ளை நடைபெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் கொடநாடு பங்களா யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored