சூழல் வந்துவிட்டது என்கிறார் ஓபிஎஸ்; எந்த பதிலுமில்லை என்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்



அதிமுக இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்த உகந்த சூழல் ஏற்பட்டு வருவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆனால், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் பன்னீர்செல்வம் அணியிடமிருந்து இதுவரை எந்த பதிலுமில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Sponsored


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல்வேறு குழப்பங்களால் பிரிந்த அதிமுக மீண்டும் சேருவதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது. கடந்த சில நாள்களாகவே இரு அணியைச் சேர்ந்தவர்களும் இணைப்புக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே ஓ.பி.எஸ் தரப்பில் இரண்டு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டதால் பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது.

Sponsored


இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைக்கு சுமுகமான சூழல் ஏற்பட்டு வருவதாக ஓ.பி.எஸ் கூறியுள்ளார். பேச்சுவார்த்தைக் குழுவை இன்று சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய  ஓ.பி.எஸ், 'தற்போது பேச்சு வார்த்தைக்கு உகந்த சூழல் ஏற்பட்டு வருகிறது. இரு தரப்பிலும் இணைவதற்கான பேச்சுவார்த்தை சுமுகமான சுழலை எட்டியுள்ளது' எனக் கூறியுள்ளார்.

Sponsored


இதனிடையே, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருக்கும் சசிகலாவின் பேனரை அகற்ற வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுசூதனன் கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலா பேனர்களை அகற்ற வேண்டும் என்ற மதுசூதனின் கோரிக்கையை ஏற்க முடியாது. பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் இதுவரை எந்த பதிலுமில்லை என்று தெரிவித்தார்.



Trending Articles

Sponsored