டி.டி.வி. தினகரன் யாரென்றே எனக்கு தெரியாது, சுகேஷ் சந்திரசேகர் திடுக் தகவல்Sponsoredஅ.தி.மு.க இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் சிக்கியுள்ள டி.டி.வி.தினகரனை யார் என்றே தெரியாது என கூறியுள்ளார் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர்.

சசிகலா-ஓ.பி.எஸ் இடையே எழுந்த மோதலால் இரு அணிகளாகப் பிரிந்த அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம், ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக முடக்கப்பட்டது. இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்கமுயன்றதாக அ.தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டப்பட்டார். இவர் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகருக்கு பணம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து டெல்லி போலீஸார் தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Sponsored


இந்நிலையில் இன்று சுகேஷ் சந்திர சேகரிடம் நடந்த விசாரணையில்,' தினகரன் யார் என்றே எனக்குத் தெரியாது' என கூறியுள்ளார். இதையடுத்து 28-ம் தேதி வரை சுகேஷுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று நான்காவது நாளாக டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரின் முன் டி.டி.வி.தினகரன் ஆஜராகியுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored