மா.செ-க்களுடனான சந்திப்பு: அ.தி.மு.க-வின் அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து ஆலோசனை!அ.தி.மு.க-வின் இரண்டு அணிகள் இணைவதுகுறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில், மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 

Sponsored


இன்றைய கூட்டத்தில், 15 மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பு மட்டுமே நடைபெற்றது. நாளை மற்றும் நாளை மறுநாள், பிற  மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம், தற்போது இரண்டு அணிகளாகப்  பிளவுபட்டிருக்கும் அ.தி.மு.கவை இணைப்பதுகுறித்து மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளக் கேட்டறிவதுதான் என்று கூறப்படுகிறது. 

Sponsored


Sponsored


கட்சி இரண்டாகப் பிளவுபட்டதால், இரட்டை இலைச் சின்னம் தற்போது தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. எனவே, சின்னத்தை திரும்பப் பெற, மாவட்டச் செயலாளர்கள் மட்டத்தில் செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விவாதிக்கப்பட்டது. நாளை, அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் இணைவதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டுவரும்நிலையில், மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

படங்கள்: ஜெரோம்Trending Articles

Sponsored