லஞ்சம் தர முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் அதிரடி கைது..!Sponsoredஇரட்டை இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டி.டி.வி.தினகரன் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார்.

கடந்த நான்கு நாட்களாக, டி.டி.வி.தினகரனிடம் டெல்லி குற்றப்பிரிவுக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவந்தனர். நான்கு நாட்களில் 37 மணி நேரம் தினகரனிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், தினகரன் டெல்லி குற்றப்பரிவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைதுசெய்யப்பட்டார்.

Sponsored


சமீபத்தில், டெல்லி போலீஸில் சிக்கிய சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். தொடர்ந்து, தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனனிடமும் தீவிர விசாரணை நடைபெற்றுவந்தது. மேலும், தினகரனின் செல்போன் அழைப்புகளையும் போலீஸார் ஆய்வுசெய்துவந்தது குறிப்பிடத்தக்கது.

Sponsored
Trending Articles

Sponsored