தினகரன் கைது: பா.ஜ.க-வை கட்டம்கட்டும் அரசியல் தலைவர்கள்..!Sponsoredதேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில், டி.டி.வி.தினகரன் டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், தினகரன் கைதுகுறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைக் கூறிவருகின்றனர். அதில், பலரும் பா.ஜ.க-வைக் குறிவைத்து கருத்துச் சொல்கின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், 'தினகரனின் தரப்பை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றது உண்மை என்றால், பணத்தை வாங்க முயன்ற தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த அந்த அதிகாரி யார்?  தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த அந்த நபர்குறித்து விசாரிக்க வேண்டும். இதில், அரசியல் சதி இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை', என்றார்.

Sponsored


இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அளித்துள்ள பேட்டியில், 'பா.ஜ.க மீது சந்தேகம் ஏற்படுகிறது. தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தினகரனை கைதுசெய்ய சுகேஷைப் பயன்படுத்தியிருக்க வாய்ப்பு அதிகம். தமிழகத்தில் காலூன்ற, அ.தி.மு.க-வைப் பலவீனப்படுத்துகிறது பா.ஜ.க. அ.தி.மு.க-வை கபளீகரம் செய்துவிட்டது பா.ஜ.க. தினகரனுக்கு ஆதரவாகப் பேசவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், முன்னாள் தலைமைச் செயலாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை என்ன ஆனது?. அ.தி.மு.க இணைவது என்பதெல்லாம் பா.ஜ.க கையில்தான் இருக்கிறது. அ.தி.மு.க தலைமையைத் தீர்மானிப்பது பா.ஜ.க கைக்குச் சென்றுவிட்டது', என்றார்.

Sponsored


'தமிழகத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார் டி.டி.வி.தினகரன். ஆதாரங்கள் இருப்பதாலேயே தினகரன் கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றங்களை வைத்துக்கொண்டு பா.ஜ.க-வை எவ்வாறு குறை சொல்ல முடியும். சட்டம் தன் கடமையைச் செய்தே ஆக வேண்டும். பா.ஜ.க மீது குற்றம் சுமத்துவது ஆதாரமற்றது' என்றார், தமிழிசை சௌந்தரராஜன்.

'அரசியல் காழ்ப்புஉணர்வால்தான் தினகரன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தினகரன் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தினகரன் நிரபராதி என நிரூபிப்போம்', என அ.தி.மு.க கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி பேட்டி அளித்துள்ளார்.


'முன் ஜாமீனை தினகரன் ஏன் தவிர்த்தார் எனத் தெரியவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விஷயம் கொடுமையானது. முன் ஜாமீன் பெற்றுக்கொண்டு, தினகரன் விசாரணையை எதிர்கொண்டிருக்க வேண்டும். தினகரனின் கைதுக்கும், எங்கள் அணிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என்கிறார் ஓ.பன்னீர் செல்வத்தின் அணியைச் சேர்ந்த கே.சி.பழனிசாமி.


'தினகரனின் கைதால் அதிர்ச்சி அடையவில்லை. தினகரன் கைதின் பின்னால் சதித்திட்டங்கள் உள்ளன. இந்த கைதுமூலம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது பா.ஜ.க. தினகரனைத் தெரியாது என்று கூறியிருக்கிறார், சுகேஷ். அரசியல், சட்டரீதியாக இந்தப் பிரச்னையை எதிர்கொள்வோம்', என்றார் நாஞ்சில் சம்பத்.Trending Articles

Sponsored