விஜயபாஸ்கர், தம்பிதுரைக்கு எதிராகக் களமிறங்கும் செந்தில் பாலாஜி!Sponsoredகரூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமையவிருந்த இடத்தை மாற்றியதன் காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பியுள்ள அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரைக் கண்டித்து வரும் 28-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என அறிவித்துள்ளார்.

கரூரில் குப்புச்சிபாளையத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைவதாகத் திட்டமிடப்பட்டது. இதனிடையே கல்லூரி அமையவிடாமல் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை முட்டுக்கட்டை போடுவதாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏவான செந்தில் பாலாஜி குற்றம் சாட்டினார். மேலும், மருத்துவக் கல்லூரியை இடமாற்றம் செய்யவும் தம்பிதுரை முயற்சி செய்வதாக செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.

Sponsored


இந்நிலையில் காந்திகிராம் பகுதியில் கல்லூரி அமைப்பதற்கு இடத்தை மாற்றியதன் காரணம் என்ன என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், முறையான அரசாணை பெறாமல் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரின் நடவடிக்கையைக் கண்டித்து வரும் 28-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்'' என்று கூறினார்.

Sponsored
Trending Articles

Sponsored