நீதிமன்ற வளாகத்தில் மு.க.ஸ்டாலினைச் சாடிய வைகோSponsored'விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற கடையடைப்புப் போராட்டத்தை, வணிகர்கள்தான் வெற்றிபெறச் செய்தனர். அந்த வெற்றிக்குச் சொந்தம்கொண்டாட தி.மு.க-வுக்கு உரிமை இல்லை' என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 

2009 ஆம் ஆண்டு, சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வைகோமீது தேசத் துரோக வழக்குத் தொடரப்பட்டது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் ஜாமீனை மறுத்த வைகோ, கடந்த ஒரு மாத காலமாக புழல் சிறையில் இருக்கிறார்.

Sponsored


இந்த வழக்கு எழும்பூர் முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் 2-ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை 5-வது கூடுதல் அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, '40 நாள்களுக்கும் மேலாகப் போராடிய விவசாயிகளை பிரதமர் சந்தித்திருக்க வேண்டும். விவசாயிகள் பிரச்னை தொடர்பாகப் போராடுவதற்கு தி.மு.க-வுக்கு உரிமை இல்லை. விவசாயிகள் பிரச்னையில் மு.க.ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தை வணிகர்கள்தான் வெற்றிபெறச் செய்தனர்' என்றார். 

Sponsored


படம் : ஆ.முத்துக்குமார்Trending Articles

Sponsored