'ராமதாஸ் எலி, நான் புலி!' - சீண்டும் ஜெ.தீபாSponsoredதற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் போன்றோர்கள் இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று அறிக்கை விடுவது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் ஜெ. தீபா .

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டதை வரவேற்கிறோம். தினகரனிடம் பணம் வந்ததற்கு காரணமானவர்களையும் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் பெருச்சாளிகள் ஊரை ஏமாற்றுவதற்காக அணிகள் இணைப்பு என்ற நாடகத்தை ஊடகங்கள் வாயிலாக நிறைவேற்றி வருகிறார்கள். தினகரன் கைது சம்பவத்தை திசை திருப்ப அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர் அகற்றம் என்ற நாடகத்தை இரு அணிகளும் நடத்தி வருகின்றன. அ.தி.மு.க வையும் இரட்டை இலையையும் மீட்டெடுக்கும் வரை ஓயமாட்டோம்.

Sponsored


தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் போன்றோர்கள் இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று அறிக்கை விடுவது கண்டனத்துக்குரியது. எடுத்தேன் கவிழ்ப்பேன் என்ற பாணியில் ராமதாஸ் போன்றவர்கள் மாபெரும் இயக்கத்தையும் சின்னத்தையும் பேசுவது புலியைப் பார்த்து எலி எக்காளம் விடுவது போன்றதாகும். அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு தமிழக மக்களுக்கு எனது தலைமையில் பொற்கால ஆட்சியை ஏற்படுத்தித்தர அனைவரையும் தாய் உள்ளத்தோடு அன்புடன் அழைக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored