வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் அட்மினை தேடுகிறார் மதுசூதனன்!Sponsoredசமூக வலைதளமான வாட்ஸ்அப் அட்மின் ஒருவர் மீது வழக்குப் போடுவதற்காக அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் அவைத்தலைவர் மதுசூதனன் அவரை தேடிவருகிறார். 

இதுகுறித்து மதுசூதனனிடம் கேட்டபோது, 'நம்ம கட்சியில இரண்டு அணிகளையும் இணைக்கும் பேச்சுவார்த்தைக் குழுவில் என் பெயர் இல்லை என்றும் இதனால் நான் கோபித்துக் கொண்டு ஓ.பி.எஸ் வீட்டுக்குப் போவதை நிறுத்தி பத்து நாள்கள் ஆகிறது என்றும் வாட்ஸ்அப்பில் பரப்பி விட்டிருக்கிறார்கள்.' 

Sponsored


அதோடு விட்டார்களா, 'அணி நடவடிக்கைகளால் நான் கோபமடைந்து வீட்டில் இருக்கிறேனாம், என்னை சமாதானம் செய்ய ஓ.பி.எஸ் ஒரு குழுவை என் வீட்டுக்கு அனுப்பி என்னை சமாதானப்படுத்தினாராம். நான், ஓ.பி.எஸ் கூட 24 மணி நேரமும் பேசிக்கிட்டுதான் இருக்கேன். இதையெல்லாம் மீட்டிங் போட்டா நான் சொல்ல முடியும்?

Sponsored


ஆனால், யாரோ பக்கத்து வீட்டிலிருந்து பார்த்த மாதிரியே நியூசைப் போடறாங்களே. உளவுப் பிரிவுக்கு ஆள் தேவையாம், இவங்கள அங்கப் போயி சர்வீஸ் பண்ணச் சொல்லுங்க. ஏன் என்கிட்டே ஒரு போனைப் பண்ணி தகவலை கன்பார்ம் பண்ணணுமா, வேணாமா? நான் இதை விடப் போறதில்லே. நீங்களும் அந்த வாட்ஸ்அப் நடத்துற அட்மின் யாருன்னு தெரிஞ்சா கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க. நானும் அவரை தேடறேன். ஆள் தெரிஞ்சாதானே கேஸ் போடமுடியும்' என்று முடித்துக் கொண்டார்.Trending Articles

Sponsored