வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி சுவர் எழுப்ப உ.பி. முதல்வர் யோகி உத்தரவு!Sponsoredமத வழிபாட்டுத் தலங்கள் அமைந்திருக்கும் பகுதியைச் சுற்றிச் சுவர் எழுப்புவதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், மத வழிபாட்டுத்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், வழிபாட்டுத் தலங்கள் அமைந்திருக்கும் பகுதிகளுக்கான சாலை வசதி, தங்குமிட வசதி, கழிப்பறை வசதிகள் குறித்து யோகி ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, மேற்கூறிய அடிப்படை வசதிகளைப் பக்தர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், வழிபாட்டுத் தலங்களைச் சுற்றிச் சுவர் எழுப்பவும் உத்தரவிட்டார். 

Sponsored


உத்தரப்பிரதேச மாநிலம், சதார்ப் பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளி மாணவர்களை, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் போல முடி வெட்டச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதாகத் தகவல் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டைப் பள்ளி மறுத்துள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored