மருத்துவர்கள் பிரச்னையில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும் - முதல்வர் பழனிசாமிSponsoredதமிழ்நாட்டில் நடைபெறும் மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார். அந்த விழாவில் பொதுப்பணித்துறை, ஊரக, வேளாண்மை, கூட்டுறவு, காவல்துறை, கல்வித்துறை என 64 துறைகளுக்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

Sponsored


Sponsored


அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'ஏழை எளியவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு வசதியாக வண்டல் மண்ணை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 33 சதவீதத்துக்கு அதிகமாக மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வழங்கிய அறிக்கையில் அடிப்படையிலேயே நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் இதுவரையில் உயிரிழந்த 65 விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

நான் பதவியேற்ற பிறகு 1,550 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். அரசு இயந்திரம் வேகமாக செயல்படுகிறது. இந்த ஆட்சியில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும். மதுக்கடை அமைப்பதற்காக தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை மாநகராட்சி சாலைகளை மாற்றவில்லை. மருத்துவர்கள் பிரச்னை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். Trending Articles

Sponsored