நாங்கள் தவறு செய்துள்ளோம் - அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல்Sponsored'நாங்கள் சில தவறுகளை செய்துள்ளோம். அதனைத் திருத்திக் கொள்வதற்கான சரியான நேரம் இதுதான்' என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


டெல்லியில் வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தல் முடிவில் பா.ஜ.க அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் இரண்டாம் இடத்தைப் பெற்றது. டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்தது. மின்னணு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

Sponsored


இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் தோல்வி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 'கடந்த இரண்டு நாள்களாக கட்சி நிர்வாகிகள் மற்றும் வாக்காளர்களிடம் பேசினேன். அதன் பின் உண்மை தெளிவாகத் தெரிந்தது. நாங்கள் சில தவறுகளை செய்துள்ளோம். இது தவறுகளைத் திருத்திக் கொள்ளும் நேரம். இது செயல்படுவதற்கான நேரம். காரணம் சொல்லி தப்பிக்கக் கூடாது. இது வேலை செய்வதற்கான நேரம். மக்கள் விருப்புவது மாற்றம் மட்டுமே' என்று பதிவிட்டுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored