தமிழ்நாட்டில் பா.ஜ.க திருவிளையாடல் - திருநாவுக்கரசர் கோபம்!Sponsored'தமிழ்நாட்டில், பா.ஜ.க அரசின் திருவிளையாடல்தான் நடைபெறுகிறது' என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். 


சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தண்ணீர்ப் பிரச்னையைப் போக்க வேண்டும். காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட கிராம சுகாதாரத் திட்டத்தை மத்திய அரசு முடக்கப்பார்க்கிறது. ஆளும் கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பிரிந்து கிடப்பதால் ஆட்சி நிர்வாகம் பாதிக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியை பா.ஜ.க ஆட்டி வைக்கிறது. பா.ஜ.கவின் திருவிளையாடல்தான் தமிழகத்தில் அரங்கேறுகிறது. கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க துடிக்கிறது. கொடநாடு, சிறுதாவூர் பங்களா அரசுடைமையாக்கப்பட வேண்டும். கொடநாடு பங்களாவில் நடந்த கொலை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும்' என்று தெரிவித்தார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored