தமிழக அரசை முடக்க நினைக்கிறது மத்திய அரசு! மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுSponsoredமத்திய அரசு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழக அரசை முடக்க முயற்சிப்பதாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.  

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, மாநில அரசுகளைத் தனது அதிகாரத்தைக்கொண்டு மிரட்டிவருவதாக, தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. மேற்கு வங்கம், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகளைக்கொண்டு அரசியல் குழப்பங்களை ஏற்படுத்திவருவதாகவும் கூறப்பட்டுவருகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் போக்கை விமர்சித்துள்ளார்.

Sponsored


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட ஏஜென்ஸிகளைவைத்து, தமிழக அரசின் நிர்வாகத்தை நிலைகுலைய வைத்துள்ளது. வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ராம மோகனராவுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது ஏன்? சுயநலத்துக்காக அரசியல் சட்ட அமைப்புகளை கண்மூடித்தனமாக பா.ஜ.க பயன்படுத்துகிறது' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
 

Sponsored
Trending Articles

Sponsored