முத்தலாக்கிற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சுSponsored'இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், முத்தலாக்கிற்கு எதிராகப் போராட வேண்டும்' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


கர்நாடக தத்துவ அறிஞர் பசவேஷ்வரின் பிறந்தநாள் விழாவில், பிரதமர் மோடி பங்கேற்றார். பெண்கள் முன்னேற்றம் தொடர்பாகப் பேசிய பிரதமர், 'முத்தலாக்கிற்கு எதிரான செயல்பாடுகள், அரசியல் செய்வதற்கு அல்ல என்பதை இஸ்லாமியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள், நவீன பாதையில் பயணிக்க வேண்டும். அவர்கள், மற்ற நாடுகளில் வாழும் இஸ்லாமியர்களுக்கு முன் உதாரணமாகச் செயல்பட வேண்டும்.

முத்தலாக்கிற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான விவாதங்கள் நடைபெறுகின்றன. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், முத்தலாக்கிற்கு எதிராகப் போராடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள், தங்களது அம்மாக்களையும் சகோதரிகளையும் முத்தலாக் பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பார்கள். அவர்கள், இந்தப் பிரச்னையை அரசியலாக்காமல் பார்த்துக்கொள்வார்கள்' என்று பேசினார். அந்த விழாவில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமாரும் பங்கேற்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored