எடப்பாடி பழனிசாமிக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்Sponsoredதென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடைசெய்ய வலியுறுத்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்னன் கடிதம் எழுதியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தின் விவசாயிகளுக்கும், கோடைகாலத்தில் மக்களின் குடிநீர் பஞ்சத்தைப்போக்கும் சக்தியாக விளங்கியது தென்பெண்ணையாறு. தென்பெண்ணை ஆற்றிலிருந்து கிளை ஆறுகளுக்கும், ஏரி, குளங்களுக்கும் தண்ணீர் சென்று, பல பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்ய உதவியாக இருந்தது. ஆனால், தொடர்ந்து பருவமழை பொய்த்ததன் காரணமாகவும், மணல் சுரண்டல் காரணமாகவும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீருக்குக்கூட தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. 

Sponsored


இந்த நிலையில், தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடைசெய்ய வலியுறுத்தி, முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் ஜி.ராமகிருஷ்ணன். இதுகுறித்து அவர் அளித்துள்ள கடிதத்தில்,'ஒரே இடத்தில் மணல் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, பல இடங்களில் அனுமதி பெறாமல் அரசு அனுமதித்த ஆழத்துக்கும் அதிகமாக 10 மீட்டர் வரை மணல் எடுக்கப்படுகிறது. மேலும், நாள்தோறும் எடுக்கவேண்டிய அளவைவிட, கூடுதல் வாகனங்களைக்கொண்டு அதிகமாக மணல் அள்ளி, அதிகத் தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது' என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

Sponsored
Trending Articles

Sponsored