ஹவாலா பணம் 50 லட்சம் சிக்கியது - டி.டி.வி.தினகரனுக்கு மேலும் சிக்கல்Sponsoredடெல்லியில் கைதான ஹவாலா ஏஜென்ட் நரேஷிடம் இருந்து 50 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் டி.டி.வி.தினகரனுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இரட்டை இலை சின்னம் லஞ்சம் தொடர்பான வழக்கில் ஹவாலா ஏஜென்ட் நரேஷ் என்பவரை கடந்த இருதினங்களுக்கு முன்னர் டெல்லியில் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் கைதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 18-ம் தேதி, டெல்லியில் உள்ள ஹோட்டலில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை காவல்துறையினர் கைதுசெய்ததோடு, அவரிடமிருந்து 1.3 கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றினர்.

Sponsored


Sponsored


அவரிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க, டி.டி.வி.தினகரன் பணம் கொடுத்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து, டி.டி.வி.தினகரனை காவல்துறையினர் கைதுசெய்தனர். டி.டி.வி.தினகரனை ஐந்து நாள் காவலில் எடுத்த டெல்லி காவல்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சென்னை ராஜ்பவனில் உள்ள மத்திய அரசு விடுதி மற்றும் அடையாரில் உள்ள தினகரனுடைய வீட்டில் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கு இடையில் டெல்லியில் ஹவாலா ஏஜெண்ட எனக் கூறப்படும் நரேஷ் இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்றது. தற்போது அவரிடம் இருந்து ஹவாலாப் பணம் 50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தரகர் சுகேஷிடம் கொடுப்பதற்காக  அந்தப் பணம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 Trending Articles

Sponsored