த்ரில்லர் படங்களை மிஞ்சிவிடும் கொடநாடு கொலைகள்! - மு.க.ஸ்டாலின் விமர்சனம்மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடக்கும் நிகழ்வுகள் திரைப்படங்களின் த்ரில்லர் காட்சியை மிஞ்சிவிடும் அளவில் இருப்பதாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Sponsored


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ம் தேதி, காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.  மேலும், அவரின் நண்பர் சயான், மற்றொரு விபத்தில் காயமடைந்தார். இதில், அவரது மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர். இதையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். ஜெயலலிதா, சசிகலா அவர்களின் அறைகளை உடைத்து மதிப்புமிக்க பொருள்களை அவர்கள் திருடிச் சென்றதாக கூறப்பட்டது.

Sponsored


இந்தநிலையில் கொடநாட்டில் நடக்கும் சம்பவங்கள் குறித்து கண்காணிக்க வேண்டும் என மாநில உள்துறை செயலாளருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'கார் ஓட்டுநர் விபத்தில் சிக்கியது தொடர்பாக காவல்துறை சரியான விளக்கம் தரவில்லை எனவும், கைக்கடிகாரத்தை எடுக்க வந்தவர்கள் ஏன் காவலாளியை கொலை செய்ய வேண்டும்' என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் 'கொடநாடு கொலையை அடுத்து நடக்கும் நிகழ்வுகள் திரைப்படங்களின் த்ரில்லர் காட்சியை மிஞ்சிவிடும்' என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
 

Sponsored
Trending Articles

Sponsored