'மாநில சுயாட்சியில் தலையிடும் பா.ஜ.க...!'- குற்றச்சாட்டுகளை அடுக்கும் மு.க.ஸ்டாலின்Sponsoredமே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சிந்தாதரிப்பேட்டையில் இருக்கும் மே தின பூங்காவில் உள்ள நினைவு தூணுக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேசிய அவர், 'தொழிலாளர்களின் நலனுக்காக தொழிற்சங்கங்கள் மட்டுமே பாடுபடுகின்றன. விவசாயிகள் பிரச்னையை தீர்ப்பதற்காகவே அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. விவசாய உழைப்பாளர்களை காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று பேசினார்.

Sponsored


Sponsored


பின்னர், சமீப காலமாக தமிழக ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்களின் பலரது வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர் சோதனை நடத்தப்பட்டு வருவது குறித்து கேள்வி எழுப்பிய போது ஸ்டாலின், 'விஜயபாஸ்கர், ராமமோகன ராவ் வீட்டில் நடைபெற்ற சோதனைகளை அடுத்து விவரங்கள் வெளியிடப்படாதது ஏன்? அதுகுறித்து, எடுத்து நடவடிக்கைகள் என்னென்ன? சோதனைகளை நடத்துவதற்கான பின்புலம் என்ன? அதில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன? தற்போது மத்திய அரசு நடத்தி வரும் விசாரணைகள் தேவையில்லை என்று நான் கூறவில்லை. ஆனால், இதுவரை நடத்திய சோதனைகளின் நிலை என்னவென்றுதான் கேள்வி கேட்கிறேன். மாநில சுயாட்சி தத்துவத்தில் பா.ஜ.க தலையிடுகிறது.' என்று பா.ஜ.க மீது பல குற்றச்சாட்டுகளை எடுக்கினார். 

 Trending Articles

Sponsored