நீங்க மட்டும் தான் இருப்பீங்களா.. நாங்களும் உண்ணாவிரதம் இருப்போம்! களமிறங்கும் கரூர் அ.தி.மு.க கோஷ்டிகள்கரூரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் விவகாரத்தில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜியும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பும் ஒரே நாளில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளனர்.

Sponsored


இரு அணிகளாக உடைந்த அ.தி.மு.க.வில் இன்னும் சேர்வதற்கான பேச்சுவார்த்தை முடியாத நிலையில் கரூர் அ.தி.மு.க கோஷ்டிகள் இரு அணிகளாகப் பிரிந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் மருத்துவக் கல்லூரி அமைப்பது தொடர்பாக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கும் அமைச்சர் தம்பிதுரை, விஜயாபாஸ்கருக்கும் உள்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. இதையடுத்து, மருத்துவக் கல்லூரியை இடமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டிய செந்தில் பாலாஜி கரூரில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

Sponsored


இதனிடையே, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளரான கரூர் நகரச் செயலாளர் நெடுஞ்செழியன் இன்று காவல்துறையிடம், மே 5-ம் தேதி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளார். மே 5-ம் தேதி கரூரில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இரு தரப்பும் போலீஸில் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored