டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம்!Sponsoredடி.டி.வி தினகரன் கைதுசெய்யப்பட்டதற்காக, மதுரையில் அவரது ஆதரவாளர்கள் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு, 15 நாள் நீதிமன்றக் காவல் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே இரு அணிகளாகப் பிரிந்த அ.தி.மு.க, மீண்டும் இணைவதற்கு முதல் கட்டமாக, தினகரனைக் கட்சியிலிருந்து விலக்கி வைப்பதாக பழனிசாமி அணியினர் அறிவித்தனர்.

Sponsored


இந்த நிலையில், தினகரனுக்கு ஆதரவாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் அ.தி.மு.க-வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். முக்கிய அமைச்சர்களோ, எம்எல்ஏ-க்களோ இல்லாமல் முழுக்க தொண்டர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசைக் கண்டித்து இவர்கள் கோஷம் எழுப்பிவருகின்றனர். இதனிடையே, தினகரன் ஆதரவாளர்களை நமது எம்.ஜி.ஆர். ஆசிரியர் மருது அழகுராஜ் வழிநடத்திவருவதாகவும் கூறப்படுகிறது.

Sponsored
Trending Articles

Sponsored