ஜெயலலிதாவை நாங்கள் யாரும் பார்க்கவில்லை! புகழேந்திக்கு, ஓ.பி.எஸ் பதிலடி



Sponsored



'அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, நாங்கள் யாரும் அவரைப் பார்க்க முடியவில்லை' எனக் கூறியுள்ளார், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட ஓ.பி.எஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,  'ஜெயலலிதா சிகிச்சைபெற்ற புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என அ.தி.மு.க (அம்மா) அணியின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி கூறியிருக்கிறார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த ஓ.பி.எஸ், 'மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நாங்கள் யாரும் அவரைப் பார்க்க முடியாத சூழல் இருந்தது. எனவே, புகழேந்தியின் பேச்சுக்கு பதிலளிக்கத் தேவையில்லை. மருத்துவர்கள் அளித்த அறிக்கைகளை மட்டுமே நாங்கள் முழுவதும் நம்பினோம்' என்று கூறினார்.

மேலும், அரசியல் காரணங்களுக்காக விதவிதமான கருத்துகளை ஸ்டாலின் கூறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஓ.பி.எஸ், தான் முதல்வராக இருந்த காலத்திலேயே ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored